மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனை சாவடி மீது மன்னார் நகர சபைக்கு சொந்தமான கழிவு அகற்றும் பவுசர் வாகனம் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இன்று (25) பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மன்னார் நகர சபைக்கு சொந்தமான கழிவு அகற்றும் குறித்த பவுசர், மன்னார் நகரில் கழிவுகளை சேகரித்து பாப்பாமோட்டை பகுதியில், மன்னார் நகர சபைக்கு சொந்தமான மீள் சுழற்சி நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியில், கட்டுப்பாட்டை மீறி இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
விபத்தின் காரணமாக, சோதனை சாவடிக்கு முன்னால் அமைக்கப்பட்ட இராணுவ வீதித் தடைகள் தூக்கி வீசப்பட்டதுடன், சோதனை சாவடியில் வாகனங்கள் பதிவு செய்யப்படும் பகுதி முற்றுமுழுதாக சேதம் அடைந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(மன்னார் நிருபர் - எஸ். றொசேரியன் லெம்பேட்)
No comments:
Post a Comment