(இராஜதுரை ஹஷான்)
சிங்கப்பூர் நாட்டு பிரஜையான அர்ஜுன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்தமை நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள் செய்த பாரிய தவறாகும். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஊடாக பிணைமுறி கொடுக்கல் வாங்கள் மோசடி தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படுகின்றன. வெகுவிரைவில் அர்ஜுன மகேந்திரன் நாட்டுக்கு அழைத்துவரப்படுவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட அதிகாரத்தை கொண்டு கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவு பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு திகதி குறித்தொதுக்கி வர்த்தமானி வெளியிட்டார்.
கொவிட்-19 வைரஸ் பரவல் தாக்கத்தின் காரணமாக ஏப்ரல் 25 ஆம் திகதி இடம் பெறவிருந்த பொதுத் தேர்தல் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை, பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20 திகதி நடத்துவதை சவாலுக்குட்படுத்தி ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தன. பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் அச்சத்தில் இவர்கள் ஆரம்பத்தில் இருந்து பொதுத் தேர்தலுக்கு எதிராக செயற்பட்டார்கள்.
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற முறைகேடுகள், அரச சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் எடுக்கப்படுகின்றன.
மத்திய வங்கி பினை முறி விநியோக மோசடியை பிரதானமாக குறிப்பிட வேண்டும். சிங்கப்பூர் நாட்டு பிரஜையான அர்ஜுன மகேந்திரனை மததிய வங்கியின் ஆளுநராக நியமித்தமை நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள் இழைத்த பாரிய குற்றமாகும்.
பிணைமுறி விநியோக மோசடி தொடர்பான விசாரணைகள் துரிதமாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படுகின்றன. மோசடியின் முக்கிய சூத்திரதாரியான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் வெகுவிரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார். இதற்கான உரிய நடவடிக்கை இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.
No comments:
Post a Comment