உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து வெளியேறாத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 2, 2020

உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து வெளியேறாத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(இரா. செல்வராஜா)

உத்தியோகபூர்வ அரச இல்லங்களில் இருந்து வெளியேறாத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரச நிர்வாக அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட 14 உத்தியோகபூர்வ இல்லங்கள் இதுவரை மீள கையளிக்கப்படவில்லை என அரச நிர்வாக அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறாத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க அரச நிர்வாக அமைச்சர் ஜனக தென்னகோன் அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட 22 உத்தியோகப்பூர்வ இல்லங்களில் 08 இல்லங்கள் மாத்திரமே இதுவரை மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஏனைய 14 இல்லங்களும் இதுவரை கைளிக்கப்படவில்லை என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் புதிதாக தெரிவாகும் அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்குவதில் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என அந்த அதிகார மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment