தொல்பொருள் காணிகள் ஆக்கிரமிப்பு தொடர்பில் ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிடின் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 2, 2020

தொல்பொருள் காணிகள் ஆக்கிரமிப்பு தொடர்பில் ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிடின் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்

(இராஜதுரை ஹஷான்)

புராதான தொல்பொருள் மையங்களை பாதுகாக்க புதிதாக ஆணைக்குழு, ஜனாதிபதி செயலணி ஆகியவற்றை ஸ்தாபிக்க வேண்டிய அவசியம் தேவையில்லை. 2002, 2009ஆம் ஆண்டுகளில் தொல்பொருள் மையங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் பிரகாரம் செயற்பட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வை காண முடியும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடனவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொல்பொருள் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ துரிதமான நடவடிக்கையினை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்த பிரச்சினை பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் சாத்தியம் அதிகமாக உள்ளது. 

அவர் மேலும் குறிப்பிடுகையில் புராதான தொல்பொருள் மையங்களுக்கு சொந்தமான காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிறுப்புக்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது மீண்டும் பேசுபொருளாக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் பௌத்த மத்திய நிலையங்களுக்கும், தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்கும் சொந்தமான காணிகள் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

தெவனகல விகாரைக்கு சொந்தமான காணி ஆக்கிரமிக்கபபட்டுள்ளதை தொடர்ந்து எழுந்த சர்ச்சையினால் தொல்பொருள் மையங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இது தற்போது எழுந்துள்ள பிரச்சினை கிடையாது. காலம் காலமாகவே காணப்படும் பிரச்சினை. கிழக்கில் பௌத்த மத உரிமைகள் மீறப்பட்டுள்ளமை ஆதாரபூ_ர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

புராதான தொல்பொருள் மையங்கள் தொடர்பில் 2002ம் ஆண்டு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அத்துடன் 2009ம் ஆண்டு அகில இலங்கை பௌத்த மத சம்மேளனம் ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ள தொல்பொருள் காணிகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்தது. இதுவரை காலமும் இந்த அறிக்கை தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் அரசியல் நோக்கங்களினால் எடுக்கப்படவில்லை. 

இதற்கு 2002ம் ஆண்டில் இருந்து ஆட்சியில் இருந்த தலைவர்கள் பொறுப்பு கூற வேண்டும். ஆகவே ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ இந்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு துரிதகரமாக செயற்பட வேண்டும். 70 வருட காலம் நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் செய்த பிழைகளின் தவறை திருத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவுக்கு உண்டு. 

தொல்பொருள் ஆக்கிரமிப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின் எதிர்காலத்தில் பாரிய விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளில் வாழும் மக்களை பிற இடங்களில் குடியமர்த்த வேண்டும். பௌத்த மக்களின் வரலாற்று ரீதியான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதே ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் பிரதான கடமை. 

சமூக விரோதிகள் மக்களாணையினை மீண்டும் பெற முயற்சிக்கின்றார்கள். இம்முறை பொதுத் தேர்தலில் தனி சிங்கள பௌத்த மக்கள் பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். என்றார்.

No comments:

Post a Comment