யாழில் இளைஞர்கள் மீது வாள் வெட்டு - இருவர் படுகாயம், ஒருவர் ஆபத்தான நிலையில்! - News View

Breaking

Post Top Ad

Saturday, May 23, 2020

யாழில் இளைஞர்கள் மீது வாள் வெட்டு - இருவர் படுகாயம், ஒருவர் ஆபத்தான நிலையில்!

யாழ்ப்பாணம், பாண்டியன்தாழ்வு பகுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய வாள் வெட்டுத் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்ததை தொடர்ந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 7.15 மணியளவில் யாழ்ப்பாணம், பாண்டியன்தாழ்வு சந்தனமாதா கோயிலுக்கு முன்பாக இடம்பெற்றது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சசிகரன் (27) என்ற இளைஞனே தலை மற்றும் கையில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றையவரான முச்சக்கர வண்டிச் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டியில் இருந்த இரண்டு இளைஞர்கள் மீதும், மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பலொன்று, வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றது. பாசையூரைச் சேர்ந்த வன்முறைக் கும்பலொன்றே இந்த தாக்குதலை மேற்கொண்டது என, பொலிஸார் தெரிவித்தனர்.

(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad