முல்லைத்தீவு, கேப்பாபுலவு விமானப்படைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த மற்றுமொரு முதியவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (01) காலை சுகவீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், சற்று முன்னர் மீண்டும் ஒரு நபர் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் உயிரிழந்திருப்பதாக, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த முதியவர் உயிரிழந்தமைக்காண காரணங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இன்றையதினம் (01) இரண்டு முதியவர்கள் இவ்வாறு உயிரிழந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் மத்தியில் அச்ச சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(மாங்குளம் நிருபர் – சண்முகம் தவசீலன்)
No comments:
Post a Comment