(எம்.மனோசித்ரா)
அத்தியாவசிய சேவைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ள புகையிரத சேவைகளில் பயணிக்கவிருக்கும் அரச மற்றும் தனியார் அதிகாரிகள் உரிய நிறுவனங்களின் பிரதானிகள் ஊடாக இணையத்தளம் மூலம் ஆசனங்களை பதிவு செய்ய வேண்டும் என்று புகையிரத திணைக்கள அதிகாரி எம்.ஜே.டி.பெர்னாண்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் திங்கட்கிழமை 4 ஆம் திகதி முதல் உரிய நிறுவனப்பிரதானிகளால் வழங்கப்படும் தகவல்களுக்கு அமையவே புகையிரத சேவை இடம்பெறும்.
அதாவது புகையிரதத்தில் பயணிக்கவிருப்போர் உரிய நிறுவன பிரதானிகள் மூலம் முன்னரே பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.
இணையத்தளம் மூலம் (Online) பதிவு செய்பவர்களுக்கு அவர்களது ஆசன விபரங்கள் அவரவர் தொலைபேசி இலக்கங்களுக்கு குறுஞ்செய்தி மூலம் புகையிரத திணைக்கள அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு ஆசனங்கள் பதிவு செய்யப்படாதவர்களுக்கு புகையிரதத்தில் பயணிக்க முடியாது.
இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் மொபிடெல் இணைந்து ஆரம்பித்துள்ள இணையத்தளம் ஊடாக அடுத்த வாரம் முதல் ஆசனங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை நிறுவன பிரதானிகள் முன்னெடுக்க முடியும் என்றார்.
No comments:
Post a Comment