பாராளுமன்றத் தேர்தலை எதிர்க்கட்சிகள் தடுப்பதற்கான உண்மையான காரணம் என்னவென பிரதமர் மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை தேர்தல் மூலம் கவிழ்க்கமுயலவேண்டும் ஆனால் தற்போதைய எதிர்க்கட்சிகள் தேர்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் தேர்தலை ஏன் எதிர்க்கின்றன என்பதற்கான காரணம் என்னவென்பது மக்களிற்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிடமும் தேர்தல் ஆணையாளரிடமும் உள்ளது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேர்தல் இடம்பெறுவது தவிர்க்க முடியாதது என்பதால் தேர்தல்கள் ஆணைக்குழு அதற்காக தயாராக வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் தனது முடிவை அறிவித்ததும் தேர்தல்கள் ஆணைக்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment