ரணிலின் தலைமையின் கீழ் ஐக்கிய தேசிய கட்சி தனது குணாதியசத்தை இழந்துள்ளது - இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 30, 2020

ரணிலின் தலைமையின் கீழ் ஐக்கிய தேசிய கட்சி தனது குணாதியசத்தை இழந்துள்ளது - இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார்

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கியதை நகைச்சுவை நாடகம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்குவதை தடுப்பதற்காக அவர்களை அச்சுறுத்தும் வகையில் ஊடகங்களில் தகவல்கள் வெளியாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 30 வருடங்களில் கட்சி தனது சமூக ஜனநாயக வேர்களை இழந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இலவசக் கல்வியை கொண்டுவந்தோம், இலவச சுகாதாரத்தை கொண்டுவந்தோம், இலவச பாடப்புத்தகங்கைள வழங்கினோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாங்கள் ஒருபோதும் தீவிர முதலாளித்துவ நவதாரளவாத கட்சியில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அதிகளவு உள்ளக ஜனநாயகத்தை கடைப்பிடிக்கும் கட்சியாக காணப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் தனது குணாதியசத்தை இழந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி நிலப்பிரபுத்துவ மாளிகைக்குள் தீர்மானங்கள் எடுக்கப்படும் கட்சியல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் சாதாரண தொண்டர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பதற்கு காரணமாக அமைந்த கட்சியின் உட்கட்சி ரணில் விக்கிரமசிங்க தலைமையின் கீழ் ஜனநாயகம் அழிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் உறுப்பினர்கள் தொண்டர்களுடன் கலந்தாலோசனையை மேற்கொள்ளாமல் முக்கிய பதவிகளிற்கு பலர் நியமிக்கப்பட்டனர் எனவும் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment