தற்போது பெய்து வரும் கடும் மழையைத் தொடர்ந்து காலி, மாத்தளை மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் காணப்படுவதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
காலி மாவட்டத்தில் வத்தேகம, காலி, கடவத் சதர, அக்மீமன, எல்பிட்டிய, நியாகம, போபே பொத்தல பிரதேச செயலகப் பிரிவுகளிலும், மாத்தளை மாவட்டத்தில் உகுவெல பிரதேச செயலகப் பிரிவிலும் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்தது.
குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளில் மலை மற்றும் மலைச்சரிவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென்பதோடு, சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்ல வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை அதிக மழை பெய்யும் நிலையில் களனி ஆறு, களு கங்கை, நில்வளா கங்கை, மீ-ஓயா, தெதுறுஓயா ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் வாழ்வோருக்கு வௌ்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment