'கவாசாகி' நோய் அறிகுறிகளுடன் ஒரு குழந்தை மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளது - வைத்திய நிபுணர் தீபால் பெரேரா - News View

About Us

About Us

Breaking

Sunday, May 24, 2020

'கவாசாகி' நோய் அறிகுறிகளுடன் ஒரு குழந்தை மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளது - வைத்திய நிபுணர் தீபால் பெரேரா

(எம்.மனோசித்ரா) 

'கவாசாகி' நோயின் அறிகுறிகளுடன் ஒரு குழந்தை மாத்திரமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார். 

'கவாசாகி' நோயின் அறிகுறிகளை உடைய பல சிறுவர்கள், லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி உறுதிப்படுத்துகையிலேயே, வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியிருப்பதாவது, 'கவாசாகி' நோயின் அறிகுறிகளை உடைய பல சிறுவர்கள், லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இதுவரை ஒரு குழந்தை மாத்திரமே அவ்வாறான நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு வருடமும் 10-15 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் இந்த அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த அறிகுறிகள் கொவிட் 19 க்கு இணையான அறிகுறிகள் எனினும் இதுவரை பரிசோதிக்கப்பட்ட எவருக்கும் இந்த தொற்று காணப்படவில்லை.

No comments:

Post a Comment