இன்று அமுலாகும் அரிசிக்கான உச்சபட்ச விலையில் திருத்தம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 28, 2020

இன்று அமுலாகும் அரிசிக்கான உச்சபட்ச விலையில் திருத்தம்

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் இன்று (28) முதல் அமுலாகும் வகையில் அறிவிக்கப்பட்ட அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கீரி சம்பாவிற்கு ரூபா 125 என விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அது தற்போது ரூபா 120 ஆக திருத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோ கிராம்
கீரி சம்பா - ரூபா 120 
சம்பா வெள்ளை/ சிவப்பு - ரூ.98
நாட்டரிசி - ரூ.96

இன்று நள்ளிரவு (28) முதல் இது நடைமுறைக்கு வருவதாக அதிகார சபை அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலை பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய,

ஒரு கிலோ கிராம்
கீரி சம்பா - ரூபா 125
சம்பா வெள்ளை/ சிவப்பு - ரூ.90
நாட்டரிசி - ரூ.90
பச்சை அரிசி வெள்ளை/ சிவப்பு - ரூ.85 

ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment