(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிநிலை காரணமாக உலகளாவிய ரீதியில் பெருமளவானோர் தமது தொழில்களை இழந்திருக்கும் நிலையில், இச்சவாலுக்கு முகங்கொடுக்க அரச, தனியார் துறை மற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைய வேண்டியது அவசியமாகும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அறைகூவல் விடுத்திருக்கிறார்.
இது குறித்த அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது,
'இம்முறை கொண்டாடப்படும் சர்வதேச தொழிலாளர் தினம் மிகவும் முக்கியமானதாகும். கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பெருமளவானோர் தொழில் வாய்ப்பை இழந்திருப்பதுடன், மேலும் பலர் தொழிலை இழக்கும் அச்சுறுத்தல் நிலை ஏற்பட்டுள்ளது. இச்சவாலை எதிர்கொள்வதற்கு அரசதுறை, தனியார்துறை மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவாகும். '
No comments:
Post a Comment