யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தினத்திலிருந்து இன்று வரை பொலிசாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையிலிருந்து, இன்றைய தினம் வரை 16 முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
குறித்த முறைப்பாடுகளில் 9 முறைப்பாடுகள் பொலிசாருக்கு எதிராகவும் அதிலும் கோப்பாய், சாவகச்சேரி, வட்டுக்கோட்டை, பருத்தித்துறை பொலிசாருக்கு எதிராகவே முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
அத்தோடு இராணுவத்துக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் அதில் ஆனையிறவு தடை முகாம் இராணுவத்தினர் தொடர்பாகவும் மற்றையது பூநகரி பகுதியில் மீன் பிடிக்க சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ளது.
ஏனைய முறைப்பாடுகள் சமுர்த்தி நிவாரணம் வழங்கல் தொடர்பில் அதிகாரிகள் மீதான முறைப்பாடுகள் பொதுமக்களால் பதியப்பட்டிருக்கின்றது.
பொலிஸாருக்கு எதிராக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அந்தந்த பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment