வெலிசர முகாமில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்படையினரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
தொற்று நோயியல் பிரிவின் இயக்குநர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை குறிப்பிட்டளவிற்கு கட்டுப்படுத்தியுள்ளோம், ஏற்கனவே இனம் காணபட்ட பகுதிகளில் இருந்தே நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்
இலங்கையில் சுமார் ஆயிரம் பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களில் 50 வீதமானவர்கள் வெலிசரை முகாமை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
கடற்படையினரும் அவருடன் தொடர்புபட்டவர்களுமே வெலிசர முகாமிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பியவர்கள் மத்தியில் தொற்று காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்திலிருந்து இவர்களை தவிர வேறு நோயாளிகள் இனம் காணப்படவில்லை இது சாதகமான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெலிசர கடற்படை முகாமிலிருந்து மேலும் பலர் அடையாளம் காணப்படலாம் என தெரிவித்துள்ள சமரவீர குறிப்பிட்ட முகாம் ஒரு தனி நாடு போன்றது, தனது சொந்த கிராமங்களை கொண்டது இதனால் வைரஸ் வேகமாக பரவும் ஆபத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெலிசர முகாமிற்குள் காணப்படும் நிலை சிறிதளவு அமெரிக்கா பிரிட்டனின் நிலையை போன்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment