(எம்.மனோசித்ரா)
நாட்டில் காணப்படும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இம்முறை வெசாக் வலயங்கள் அமைத்தல், தானசாலைகள் அமைத்தல் மற்றும் வெசாக் தோரணங்களை காட்சிப்படுத்தல் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் காணப்படும் கொரோனா வைரஸ் அச்சசுறுத்தல் காரணமாக இம்முறை வெசாக் உற்சவத்தை வேறு முறைமையில் கொண்டாட வேண்டியிருக்கிறது. அதற்கான ஆலோசனைக் கோவை சுகாதார அமைச்சினால் அனைத்து பௌத்த மதத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
வெசாக் வலயங்கள், தானசாலைகள், வெசாக் தோரணங்கள் காட்சிப்படுத்தல் உள்ளிட்ட மக்கள் ஒன்று கூடக் கூடியவாறான நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அத்தோடு வெசாக் தினத்தில் தேவையற்ற முறையில் வீடுகளிலிருந்து வெளிச் செல்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் சுகாதார அமைச்சு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ரானி தெரிவித்துள்ளமைக்கமைய, விகாரைகளில் சமூக இடைவெளியைப் பேண முடியாதவாறு மக்களை ஒன்றிணைந்து பூஜை வழிபாடுகளை நடத்துவதை தவிர்த்துக் கொள்ளவும். இவற்றை மக்களை வீடுகளிலிலேயே பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட வேண்டும்.
அத்தோடு வெசாக் கூடுகளை வீடுகளில் தொங்க விடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். அத்தோடு சமூக இடைவெளியை பேணும் வகையில் அனைத்து வர்த்தகர்களும் செயற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது.
No comments:
Post a Comment