நாயிடமிருந்து மீட்ட மான் குட்டி பொலிஸாரிடம் ஒப்படைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, May 15, 2020

நாயிடமிருந்து மீட்ட மான் குட்டி பொலிஸாரிடம் ஒப்படைப்பு

நாயிடமிருந்து காப்பாற்றிய மான் குட்டியை லெட்சுமி தோட்ட தொழிலாளர்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக, பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர் 

பொகவந்தலாவை லெட்சுமி தோட்ட தேயிலையில் நடமாடிய மான் குட்டியொன்று இன்று (15) மதியம் நாயிடம் சிக்குண்டுள்ளது

குறித்த மான் குட்டி, நாயிடம் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டது. மான் குட்டி இரை தேடி தேயிலை மலைப்பகுதியில் திரிந்தபோதே இவ்வாறு ஆபத்துக்குள்ளாகியுள்ளது

தம்மால் பொறுப்பேற்கப்பட்ட மான் குட்டியை நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

(எம். கிருஸ்ணா)

No comments:

Post a Comment