கொரோனா வைரஸ் பரவுவதை இலங்கையில் 90 வீதம் கட்டுப்படுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க எனினும் கட்டுப்பாடுகள் முழுமையாக எப்போது நீக்கப்படும் என தற்போது தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது எங்கும் கொரோனா தொற்று இல்லை என தெரிவித்துள்ள அவர் தற்போது தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தே வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டாக சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம் நாட்டில் வைரசினை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் தற்போது நாட்டை ஒரளவு திறந்துள்ளோம் என தெரிவித்துள்ள அவர் எதிர்காலத்தில் விமான நிலையமும் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வைரஸ் தொடர்ந்து பரவுவதை தடுப்பதற்காக சிறந்த சுகாதார பழக்கங்களை, சமூக விலக்கல்கள் மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை அனைவரும் பின்பற்ற வேண்டிய பொறுப்புணர்வுள்ளது எனவும் அனில்ஜசிங்க தெரிவித்துள்ளார்.
அனைவரிடமிருந்தும் சமமான பங்களிப்பு அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர் அரச துறை ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள், வர்த்தகர்கள், வீடுகளில் இருப்பவர்கள் என அனைவரும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையகத்தின் முடிவிற்கு ஆதரவும் வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்கு சுகாதார அதிகாரிகள் தயார் என அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment