நாள் சம்பளத்தை அரசுக்கு நன்கொடையாக வழங்கும் நடவடிக்கை முப்படைகள், பொலிஸாருக்கு பொருத்தமற்றது - பாதுகாப்பு செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 17, 2020

நாள் சம்பளத்தை அரசுக்கு நன்கொடையாக வழங்கும் நடவடிக்கை முப்படைகள், பொலிஸாருக்கு பொருத்தமற்றது - பாதுகாப்பு செயலாளர்

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கத்திற்கு ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் திட்டமானது முப்படை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையிருக்கு பொருத்தமற்றது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

மேற்படி கோரிக்கையைத் தொடர்ந்து, தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிகளை சமாளிக்க அமைச்சின் கீழ் வரும் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் தங்கள் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து அரைச் சம்பளம், வார சம்பளம் அல்லது மே மாதத்தின் ஒரு நாள் சம்பளத்தை அரசாங்கத்திற்கு வழங்குமாறு கோரி அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரர் கலாநிதி பி.பி. ஜெயசுந்தரவின் வேண்டுகோளுக்கு பங்களிக்க விரும்புபவர்கள் மாத்திரம் அவர்களின் சம்பளத்தை நன்கொடையாக வழங்குமாறு நாங்கள் கோரியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

முப்படையினர் மற்றும் பொலிஸாரிடமிருந்து ஒரு நாள் சம்பளத்தை வழங்கமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக சில சமூக ஊடகங்களில் வெளியான கருத்துக்களை முற்றாக மறுத்த மேஜர் ஜெனரல் குணரத்ன, நன்கொடை வழங்கும் இந்த கோரிக்கை இராணுவ, கடற்படை, விமானப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் படையினருக்கு அவசியமற்றது என உறுதிப்படுத்தினார்.

எவ்வாறாயினும், ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்குவது முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைக்கு பொருத்தமற்றது என பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு பாதுகாப்புச் செயலாளரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment