திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாயில் 31 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, May 1, 2020

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாயில் 31 பேர் கைது

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வன ஜீவராசி பாதுகாப்பு பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்ட 31 சந்தேக நபர்களை நேற்றிரவு (30) கைது செய்துள்ளதாக கந்தளாய் வனஜீவராசி பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகளும், தேன் போத்தல்களும், மரை இறைச்சி வகைகள் மற்றும் கத்தி மண்வெட்டி போன்ற பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் கந்தளாய் வன ஜீவராசி பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் கந்தளாய், வான்எல, அக்போபுர, ஜயந்திபுர, பேராறு போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை சேருவில பொலிஸார் ஊடாக இன்றைய தினம் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை நிருபர் பாருக்

No comments:

Post a Comment