கொரோனா பரவல் முறைப்பாட்டுக்கு மேலுமொரு தொலைபேசி இலக்கம் அறிமுகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

கொரோனா பரவல் முறைப்பாட்டுக்கு மேலுமொரு தொலைபேசி இலக்கம் அறிமுகம்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் பொதுமக்கள், பொலிஸ் தலைமையகத்திற்கு முறைப்பாடுகளை மேற்கொள்ள 1933 எனும் புதிய தொலைபேசி இலக்கமொன்றை பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

1933 எனும் குறித்த தொலைபேசி இலக்கம் வழியாக, முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்பதோடு, 119 அவசர தொலைபேசி சேவைக்கும் இம்முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நாட்களில் 119 இலக்கத்திற்கு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையிலான முறைப்பாடு தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 119 அவசர அழைப்பு மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் அழைப்புகளால் ஏற்படும் அழைப்பு நெரிசலை தடுக்கும் நோக்கில் அவ்விலக்கத்திற்கு ஒரே நேரத்தில் கிடைக்கும் அழைப்பு எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment