மினுவாங்கொட வீடொன்றில் ஒளிந்திருந்த 31 வெளிநாட்டுப் பிரஜைகள் கண்டுபிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

மினுவாங்கொட வீடொன்றில் ஒளிந்திருந்த 31 வெளிநாட்டுப் பிரஜைகள் கண்டுபிடிப்பு

மினுவாங்கொட நில்பனாவ பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்த நேபாளம் மற்றும் இந்தியப் பிரைஜகள் 31 பேரை கண்டுபிடித்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய இன்று (வியாழக்கிழமை) குறித்த வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டபோது அங்கு மறைந்திருந்த நேபாளப் பிரைஜைகள் 30 பேரும் இந்தியப் பிரஜை ஒருவர் உட்பட 31 பேரை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து குறித்த வெளிநாட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தும் முகாங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் வீட்டின் உரிமையாளர் குறித்த வீட்டிலேயே தனிமைபடுத்தப்பட்டார்.

பிற நாடுகளுக்கு தொழிலுக்குச் செல்வதற்கு இலங்கையை இடைத்தங்கல் நிலையமாக இவர்கள் கொண்டிருந்தனர் என்றாலும் அரசாங்க அறிவிப்புக்களை மீறி மறைந்திருந்தமை தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment