நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட ஒஸ்போன் மிக்போர்ட் தோட்டத்தில் இம்மாதத்துக்கான சந்தாப் பணம் அறவிடப்பட்டுள்ளதால் அதிருப்தியில் இருப்பதாக தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
மார்ச் மாதத்துக்கான சந்தாப் பணம் அறவிடப்படாது என மலையகத்தின் பிரதான தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. என்றாலும் மிக்போர்ட் தோட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர்களிடம் மார்ச் மாதத்துக்கான சந்தாப் பணம் அறவிடப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரத்திடம் வினவிய போது, கொரோனா பிரச்சினை முடியும் வரை சந்தாப்பணத்தை அறவிட வேண்டாமென தோட்ட முகாமைத்துவத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தோட்ட நிர்வாகம் அதனை கவனத்தில் எடுக்காமல் சந்தாவை அறவிட்டுள்ளது. அறவிடப்பட்ட சந்தாப்பணத்தை மீண்டும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்திற்கே திருப்பியனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திகாம்பரம் கூறியுள்ளார்.
(பூண்டுலோயா நிருபர்)
No comments:
Post a Comment