கொழும்பின் சில பகுதிகளில் நாளை 18 மணித்தியால நீர் வெட்டு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 8, 2020

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 18 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை (09) பிற்பகல் 1.00 மணி முதல் 18 மணித்தியால நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய (கொழும்பு 09, 14) தெமட்டகொடை, கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளிலும் நவகம்புர பகுதியிலும் குறித்த நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்தோடு, (கொழும்பு 13, 15) கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை, மட்டக்குளி ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment