நாவலபிட்டி பகுதியில் மருந்தகம் ஒன்றில் உட்பகுந்து 12,900 ரூபா பெறுமதியான மருந்து வகைகள் திருடப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி மாவட்டத்தில் காலவரையறையின்றி ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பின்புலத்தில் நாவலப்பிட்டிப் பகுதியில் உள்ள மருந்தகமொன்றில் உட்புகுந்தது பெறுமதியான மருந்துகள் களவாடப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு பதிவாகியுள்ளது.
திருட்டு சம்பவம் தொடர்பில் மருந்தக உரிமையாளரின் முறைப்பாட்டுக்கமைய விசாரணையை முன்னெடுக்கும் பொலிஸார் இதுவரையில் சந்தேகநபர்கள் எவரையும் கைது செய்யப்படவில்லை. 12,900 ரூபா பெறுமதியாக மருந்துகளே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன.
மருந்தகத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி. கெமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாவலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்)
No comments:
Post a Comment