லெபனானில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு ! - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 1, 2020

லெபனானில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு !

லெபனானில் சட்டவிரோதமாக வாழும் இலங்கையர்களுக்கு நிபந்தனை பொதுமன்னிப்பினை வழங்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

கொவிட் 19 பரவல் காரணமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் முடக்கல் நடவடிக்கையை லெபனான் முன்னெடுத்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

லெபனான் அரசாங்கத்தின் பொதுமன்னிப்பினூடாக முறையான சட்ட ஆவணங்கள் இன்றி அங்கு பணி புரியும் இலங்கை குடியேற்றவாசிகள் நாடு திரும்ப முடியும். 

லெபனானில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு அபராதத் தொகை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் குற்றவியல் குற்றச்சாட்டுக்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்ட பின்னர் பொதுமன்னிப்பு பெற முடியும். 

அதன்படி, இலங்கைக்கு திரும்ப விரும்பும் தொழிலாளர்கள் லெபனானில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்வதன் மூலம் வெளியேறும் அனுமதியினைப் பெறலாம். 

பொதுமன்னிப்பு பெற விரும்புவோர் தங்களது தகவல்களை மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் வழியாக தூதரகத்திற்கு அனுப்பலாம். 

எனினும் இலங்கை மற்றும் லெபனான் இடையே விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னரே வெளியேறும் அனுமதி வழங்கப்படும். 

இருந்தபோதும் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோருக்கான அனுமதியை அரசாங்கம் சுகாதாரத் துறையுடன் கலந்தாலோசித்ததன் பின்னரே வழங்கும். 

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு : Email: slemb.beirut@mfa.gov.lk Telephone /WhatsApp: 00961 76700657 / 00961 81363894

No comments:

Post a Comment