பொதுஜன பெரமுனவின் தேர்தல் நடவடிக்கைகளிலிருந்து பஷில் முழுமையாக விலகி நடுநிலையாகவுள்ளார் - டிலான் பெரேரா - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 29, 2020

பொதுஜன பெரமுனவின் தேர்தல் நடவடிக்கைகளிலிருந்து பஷில் முழுமையாக விலகி நடுநிலையாகவுள்ளார் - டிலான் பெரேரா

(இராஐதுரை ஹஷான்) 

ஸ்ரீலங்கா பொதுஐன பெரமுனவின் தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ முழுமையாக விலகி தற்போது நடுநிலையாக செயற்படுகின்றார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில். ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரை அனைவருக்கும் நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும். 

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. இதன் காரணமாகவே அத்தியாவசிய சேவை தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். பொதுஜன பெரமுனவின் தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ச விலகி நடுநிலையாக செயற்படுகின்றார். 

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் உட்பட பங்காளி கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுனைந்த விதத்தில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது சாத்தியமற்றது. ஒருவேளை கூட்டினால் சட்ட சிக்கல் ஏற்படும். 

அதாவது பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் செய்யும் போது ஐக்கிய தேசிய கட்சியில் இருந்த பலர் அக்கட்சியில் இருந்து விலகி புதிய சின்னத்தில் போட்டியிடுவதாக குறிப்பிட்டனர். இவ்வாறான நிலையில் இவர்கள் பாராளுமன்றத்தில் எக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். 

கொரோனா வைரஸ் ஒழிப்புக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும். கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டி எதிர்த்தரப்பினரது ஆதரவை பெற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிதி அதிகாரத்தை கொண்டு அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படும் என்றார். 

No comments:

Post a Comment