இன்னாலில்லாஹி வஇன்னாலிலைஹி ராஜிஊன்.
ஐ.டி.எச். இல் அனுமதிக்கப்பட்டிருந்த மருதானையைச் சேர்ந்த சகோதரர் பீ.எச்.எம். ஜனுஸ் அவர்கள் மரணித்த செய்தி அறிந்து துயருறுகிறேன்.
அன்று, அடக்கம் செய்யலாம் என்று சுற்றுநிருபம் இருந்ததால் உடனடியாக உரியவர்களோடு பேச முடிந்தது.
இன்று, எரிக்கவே வேண்டும் என சுற்றுநிருபம் மாற்றப்பட்டுள்ளதால் காலையில் உயரதிகாரிகள் மற்றும் அரச மேல்மட்டத்தோடு நமது புத்திஜீவிகள் மற்றும் புரிந்துணர்வு கொண்ட மாற்று மத முற்போக்கு சிந்தனையாளர்களையும் இணைத்துக்கொண்டு பேசியுள்ளேன்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பௌசியின் இல்லத்தில் முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஒன்றுகூடி பிரதமரை சந்தித்து அவரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளோம்.
இன்று நடைபெறவுள்ள கட்சி தலைவர்கள் சந்திப்பும் இதற்கு வசதியான வாய்ப்பாக அமையும்.
நல்லதொரு முடிவை எட்ட துஆ செய்யுங்கள்.
நன்றி.
ரவூப் ஹக்கீம்
தலைவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
No comments:
Post a Comment