(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஊரடங்கு சட்டம் காரணமாக மேல் மாகாணத்தில் நிர்க்கதியாகியுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கு தேவையான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குமாறு திறைசேரிக்கு அறிவித்திருப்பதாக பொருளாதார மறுசீரமைப்பு வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக செயலணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தொழில் நிமித்தம் மேல் மாகாணத்துக்கு வந்து நிர்க்கதியாகி இருக்கும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அதிகமானவர்கள் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதால் தங்களின் சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் இருந்து வருகின்றனர்.
இவர்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
குறிப்பாக கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலே வெளிமாவட்டங்களைச் வேர்ந்தவர்கள் அதிகமாக நிர்க்கதியாகி இருக்கின்றனர். இவர்களுக்கான நிவாரண பொதிகளை வழங்க தேவையான நிதியை அந்ததந்த மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குமாறு பொருளாதார மறுசீரமைப்பு வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணி திறைசேரிக்கு அறிவித்திருக்கின்றது.
அந்தந்த கிராமங்களில் தங்கி இருக்கும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கிராம உத்தியோகத்தர் மற்றும் பொலிஸாரின் தலையீட்டில் நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்ட செயலாளர்களின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்வுள்ளது.
இவ்வாறு வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 52ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொழில் நிமித்தம் மேல் மாகாணத்துக்கு வந்து நிர்க்கதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
No comments:
Post a Comment