பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - அமைச்சர் ரமேஷ் பதிரன - News View

About Us

About Us

Breaking

Friday, April 3, 2020

பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - அமைச்சர் ரமேஷ் பதிரன

(இராஜதுரை ஹஷான்) 

கொவிட்-19 வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அடுத்த மாதம் முதல் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் சூழல் உறுதிப்படுத்தப்படும் என பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்தார். 

ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதனால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிந்துள்ளது. தற்போது முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அடுத்த மாதத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு செல்வதற்கான சூழல் ஏற்படுத்தப்படும். 

பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய உற்பத்திகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாகவே பொருளாதாரத்தை சீரான நிலையில் நிலைப்படுத்திக் கொள்ள முடியும். 

கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு சர்வ கட்சிகளின் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது. பொதுமக்களும் பொறுப்புடன் நிலைமையினை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment