எனது பெயரில் போலியான செய்திகள் பரவுவதை நம்ப வேண்டாம் - ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Friday, April 3, 2020

எனது பெயரில் போலியான செய்திகள் பரவுவதை நம்ப வேண்டாம் - ஜனாதிபதி

(ஆர்.யசி) 

எனது பெயரில் போலியான செய்திகள் பரவுவதை நம்ப வேண்டாம் எனவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இணையத்தளங்கள், ஜனாதிபதி ஊடகப் பிரிவு, ஏற்றுக்கொள்ளப்பட்ட அங்கீகாரம் பெற்ற முகப்புத்தகம் மற்றும் டுவிட்டர் கணக்கினூடாக அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவல் நிலைமையில் நாட்டில் போலியான செய்திகள் பல பரவி வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் இதை தெரிவித்துள்ளார். 

அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதானது, நாட்டில் நிலவும் தற்போதைய அவரசகால நிலையில் எனது கருத்தாக கூறப்படும் பல போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது. பல்வேறுபட்ட இணையத்தளங்கள், தொலைபேசி தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் மூலமாக இவை பரப்பப்பட்டு வருகின்றன, ஆனால் என்னால் அறிவிக்கப்படும் விசேட அறிவித்தல்கள் அல்லது செய்திகள் என்பன நாட்டின் அதிகாரபூர்வ இணையத்தளங்கள், ஜனாதிபதி ஊடகப் பிரிவு, ஏற்றுக்கொள்ளப்பட்ட அங்கீகாரம் பெற்ற முகப்புத்தகம் மற்றும் டுவிட்டர் கணக்கினூடாக அறிவிக்கப்படும் என ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

No comments:

Post a Comment