(நா.தனுஜா)
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று நோயாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது பாரிய நெருக்கடியொன்று ஏற்பட்டிருக்கிறது.
இதனிடையே நாட்டு மக்களுக்கு உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொடுப்பதை நோக்காகக் கொண்டு, நாட்டிற்குள் அவற்றை உற்பத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது.
அதன் முதற்கட்டமாக நகரங்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த நாட்டிலும் 10 இலட்சம் வீட்டுத் தோட்டங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி 5 வகையான விதைகள் அடங்கிய பக்கெற் மற்றும் அதற்குரிய அறிவுறுத்தல்கள் என்பன 20 ரூபாய்க்கும், 3 மரக்கறி வகைகள் அடங்கிய பக்கெற் 20 ரூபாய்க்கும் வழங்கப்படவுள்ளது.
இச்செயற்திட்டத்திற்கென www.saubagya.lk என்ற புதிய இணையத்தளப் பக்கமொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், தமது வீட்டுத் தோட்டத்திற்கு அவசியமான விதைகளை அந்த இணையப்பக்கத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் அதனூடாக பயிர்ச் செய்கை தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், உங்களது ஆலோசனைகளையும் தெரியப்படுத்த முடியும்.
இச்செயற்திட்டத்தின் மூலம் தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் சவாலுக்கு மத்தியில் உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு தெரிவித்திருக்கிறது.
எனவே நாட்டின் தற்போதைய நிலையைப் புரிந்துகொண்டு, இந்தத் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறும் அது மக்களைக் கேட்டிக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment