யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 1, 2020

யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை

(ஆர்.ராம்) 

யாழ். மக்கள் மிகுந்த அவதானத்துடன் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரியுள்ளார். 

யாழில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

அத்துடன் கொரோனா தொற்றுக்கு இலக்கான சுவிஸ் மத போதகரைச் சந்தித்தவர்களே தொடர்ந்தும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். 

ஆகவே இந்த வைரஸின் தீவிரத்தன்மையை யாழ் மக்கள் உணர்ந்து ஒத்துழைப்புக்களை நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். 

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருப்பதால்தான் யாழில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைவாக உள்ளது. ஆகவே ஊரடங்கு வேளையில் மக்கள் வீடுகளுக்குள் இருப்பதே பாதுகாப்பானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment