தென்னாபிரிக்காவின் பிரபல எச்ஐவி விஞ்ஞானி கொரோனாவுக்கு பலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 1, 2020

தென்னாபிரிக்காவின் பிரபல எச்ஐவி விஞ்ஞானி கொரோனாவுக்கு பலி

தென்னாபிரிக்காவின் பிரபல எச்ஐவி விஞ்ஞானி கிட்டா ராம்ஜி கொரோனா வைரசிற்கு பலியாகியுள்ளார். 

டேர்பன் நகரின் மருத்துவமனையொன்றில் அவர் உயிரிழந்துள்ளார். 

பிரிட்டனிற்கு விஜயம் மேற்கொண்டு நாடு திரும்பியவேளையே அவர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார். 

எச்ஐவியால் பெண்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டுபிடிப்பதற்காக அவர் பல வருடங்களாக கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார் என அவரது சகாக்கள் தெரிவித்துள்ளனர். 

ராம்ஜியின் மறைவு அவரின் சேவை உலகிற்கு அவசியமாகவுள்ள தருணத்தில் பெரும் இழப்பு என யுஎன்எயிட்சின் தலைவர் தெரிவித்துள்ளார். 

அவரின் மறைவு சுகாதார துறை முழுவதற்கும் எயிட்சிற்கு எதிரான சர்வதேச போராட்டத்திற்கும் ஏற்பட்ட பாரிய அடி தென்னாபிரிக்காவின் துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment