தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை மற்றும் வட்டகொடை நகரங்களிலுள்ள மதுபான விற்பனை நிலையங்கள் பொலிஸாரினால் நேற்று சீல் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மதுபான விற்பனை நிலையங்களுக்கு மறு அறிவித்தலின்றி மூடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற சந்தர்ப்பத்தில் மதுபான விற்பனை உரிமையாளர்கள் மறைமுகமாக விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தமையால் வட்டகொடை நகரங்களிலுள்ள மதுபான சாலைகள் காலவரையின்றி மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
(தலவாக்கலை நிருபர்)
No comments:
Post a Comment