மாற்றுத் திறனாளிகளை உள்ளடங்கிய வறிய குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக நிவாரணங்களை வழங்கி வருவதாக மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அனுசா சந்திரசேகரன், தமது வழிகாட்டலுடன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிவாரணத் திட்டம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
அவரது மேலும் கூறியுள்ளதாவது, ”கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கினால் தொழில்களை இழந்து, வருமானம் இழந்து நிர்க்கதியாகியிருக்கும் எமது உறவுகளுக்காக நாம் முன்னெடுத்துவரும் நிவாரண பணிகளின் தொடர்ச்சியாக மாற்றுத் திறனாளிகளை உள்ளடங்கிய வறிய குடும்பங்கள் இணங்காணப்பட்டு அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கானது தோட்டத் தொழிலாளர்கள், தின சம்பளத்திற்கு வேலை செய்வோர், பிற மாவட்டங்களுக்கு வேலைக்குச் சென்றோர் என பலரின் வாழ்வில் சொல்லொண்ணா துன்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் மாற்றுத் திறனாளிகளும் அவர்களை பாராமரிக்கும் குடும்பத்தாரும் சுமூகமான காலக்கட்டத்தில் கூட மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள். அப்படி இருக்கும் போது இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் பெருமளவில் கஷ்டப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்காக எம்மால் இயன்ற நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment