ஒரே நாளில், இத்தாலி - 727, ஸ்பெயின் - 667, பிரான்ஸ் 509, இங்கிலாந்து 563 பேர் - கொரோனாவின் கோரப்பிடியில் ஐரோப்பா - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 1, 2020

ஒரே நாளில், இத்தாலி - 727, ஸ்பெயின் - 667, பிரான்ஸ் 509, இங்கிலாந்து 563 பேர் - கொரோனாவின் கோரப்பிடியில் ஐரோப்பா

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 727 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினிலும் 667 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது. 

உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 28 ஆயிரத்து 65 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 46 ஆயிரத்து 496 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 632 பேர் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 லட்சத்து 87 ஆயிரத்து 937 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 34 ஆயிரத்து 994 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில், ஐரோப்பாவிலும் கொரோனா ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் நேற்று ஒரே நாளில் வைரஸ் தாக்குதலுக்கு 727 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 155 ஆக அதிகரித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டிலும் கொரோனாவுக்கு நேற்று மட்டும் 667 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 509 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 32 ஆக அதிகரித்துள்ளது.

இங்கிலாந்திலும் கொரோனா தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 563 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 352 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment