கொரோனா எனப்படும் கொவிட்-19 நோய்த் தொற்றானது உலகளாவிய ரீதியில் பல நாடுகளுக்கும் பரவி உயிர் பலியையெடுத்து வருகின்றது.
இந்த நிலையிலும் இதுவரை கொரோனா எனப்படும் கொவிட் 19 தாக்காத நாடுகளும் அதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத நாடுகளும் இருக்கின்றன.
கொரோனா எனப்படும் கொவிட் 19 நோய்த் தொற்றால் உலகளாவிய ரீதியில் இதுவரை 1,098,434 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 59 ஆயிரத்து 160 பேர் வரை இறந்துள்ளனர்.
இந்த கொவிட் 19 நோய்த் தொற்றில் இருந்து மக்களையும் உலகத்தையும் மீட்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட பல நாடுகள் போராடி வருகின்றன.
அத்துடன் பல நாடுகள் தமது செயற்பாடுகளை முடக்கியுள்ளதுடன் மக்களை தனிமைப்படுத்தும் செயற்பாடுகளையும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக இந்த கொரோனா எனப்படும் கொவிட் 19 நோய்த் தொற்று அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மன், போன்ற நாடுகளை தற்போது நிலைகுலைய வைத்துள்ளதுடன் அங்கு உயிர்ப்பலிகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதையும் நோய்த் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதையும் காண முடிகின்றது.
கொமொரோஸ், கிரிபதி, லெசோதோ, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா, நவ்ரூ, வட கொரியா, பலாவு, சமோவா, சாவோ டோம் மற்றும் பிரின்சிபி, சாலமன் தீவுகள், தெற்கு சூடான், தஜிகிஸ்தான், டோங்கா, துர்க்மெனிஸ்தான், துவாலு, வனடு, ஏமன் ஆகிய நாடுகளில் இதுவரை கொரோனா எனப்படும் கொவிட் 19 நோய்த் தொற்று அறியப்படவில்லை. இவை தவிர அந்தார்ட்டிகா கண்டமும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.
பயணக் கட்டுப்பாடுகள் நிறைந்து இருப்பதால்தான் குறித்த பகுதிகளில் எல்லாம் கொரோனா பரவவில்லை என்று கூறப்படுகிறது.
பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் பல ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெளி உலகத் தொடர்பு அதிகம் இல்லாமல் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை தாங்களாகவே பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
இந்நிலையில், உலகையே உலுக்கி வரும் கொரோனா தற்போது அமேசான் காடுகளில் வாழும் மக்களிடமும் பரவத் தொடங்கியுள்ளது.
அமேசானின் கொகமா பழங்குடியின இனத்தை சேர்ந்த 20 வயது நிரம்பிய இளம் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்பெண் சுகாதாரப் பணியாளாராக செயல்பட்டு வருகிறார்.
அமேசானில் வாழும் பழங்குடியினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அது காடுகளில் வாழும் ஏனையவர்களுக்கும் பரவும் அச்சம் நிலவி வருகிறது. இதற்கிடையே வைரஸ் உறுதி செய்யப்பட்ட பெண் அவரது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா எனப்படும் கொவிட் 19 நோய்த் தொற்று நுழையாத நாடாக வட கொரியா உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அது தொடர்பில் பல முரண்பாடான செய்திகளும் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்த கொரோனா என்னும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் பல ஆராய்ச்சிகளையும் பல அணுவாயுதங்களையும் வைத்திருந்த உலகின் வல்லரசுகளாக இருந்த நாடுகளையும் பொருளாதார ரீதியில் முன்னிலை பெற்ற நாடுகளையும் இன்று புரட்டிப்போட்டுள்ளது.
No comments:
Post a Comment