பிணவறையாக மாறும் உலகின் மிகப் பெரிய சந்தை ஒன்றின் ஒரு பகுதி ! - News View

About Us

About Us

Breaking

Friday, April 3, 2020

பிணவறையாக மாறும் உலகின் மிகப் பெரிய சந்தை ஒன்றின் ஒரு பகுதி !

பிரான்ஸ், பாரிஸின் தெற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய சந்தைகளில் ஒன்றான ருங்கிஸ் இன்டர்நேஷனல், பிணவறையாக மாற்றமடையவுள்ளது. 

இவ்வாறு மாற்றமடையும் போது அங்கு கொரோனா வைரஸால் இறந்தவர்களின் 1,000 சவப் பெட்டிகளை குளிரூட்டப்பட்ட நிலையில் வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. தனது சந்தை கட்டிடத்தின் ஒரு பகுதியை பாரிஸ் பொலிஸாரின் ஒப்புதலுடன் அதற்கு பொறுப்பான நிறுவனம் வழங்கியுள்ளது. 

575 ஏக்கர் நிலப் பரப்பில் 15,000 பேர் வரை பணியாற்றும் ருங்கிஸ் இன்டர்நேஷனலின் சந்தை தொகுதியின் ஒரு பகுதி இவ்வாறு வழங்கப்பட்ட போதிலும் அங்கு தொடர்ந்து உணவு விற்பனை இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரான்ஸில் கொவிட்19 காரணமாக இறப்பு எண்ணிக்கையை சமாளிக்க முடியாத அளவில் அதிகரித்து வரும் நிலையில், அங்கு அதிக இடப்பரப்பை கொண்ட பிணவறைக்கான தேவை ஏற்பட்டது. இதனையடுத்து குறித்த நிறுவனம் தமது கட்டிடத்தின் ஒரு பகுதியை தற்காலிக பிணவறையாக வழங்கியுள்ளது. 

இப்பிணவறை பகுதி சந்தை தொகுதியில் இருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்படுமெனவும், மீதமுள்ள சந்தை தொகுதி வணிகத்திற்காக திறந்திருக்கும், எனவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அத்துடன் வெள்ளிக்கிழமை முதல் சவப் பெட்டிகள் ருங்கிஸுக்கு வரத் தொடங்கியுள்ளதாகவும் திங்களன்று குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் மரியாதை செலுத்த கடுமையான நிபந்தனைகளின் கீழ் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சவப் பெட்டிகள் இறுதியில் சந்தை மண்டபத்திலிருந்து பிரான்ஸ் அல்லது வெளி இடங்களில் உள்ள கல்லறைகள் அல்லது தகனங்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment