கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிரான்சின் விமானந்தாங்கி கப்பலொன்று துறைமுகத்திற்கு திரும்புகின்றது என பிரான்சின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
சார்ல்ஸ் டி கோல் என்ற விமானந்தாங்கி கப்பலில் உள்ளவர்களுக்கே நோய் அறிகுறிகள் தென்படுவதாக பிரான்சின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கப்பலில் உள்ள 40 படையினருக்கு நோய் அறிகுறிகள் தென்படுகின்றன அவர்கள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பிரான்சின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவ குழுவொன்று புதன்கிழமை கப்பலிற்குள் சென்று பாதிக்கப்பட்டுள்ளவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் என பிரான்சின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அட்லான்டிக் சமுத்திரத்தில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கப்பல் மத்திய தரை கடல் பகுதியில் உள்ள துறைமுகத்திற்கு திரும்புகின்றது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment