ஊரடங்கு உத்தரவை மீறியதால் பதவியிறக்கம் செய்யப்பட்டார் நியூசிலாந்து சுகாதார அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 8, 2020

ஊரடங்கு உத்தரவை மீறியதால் பதவியிறக்கம் செய்யப்பட்டார் நியூசிலாந்து சுகாதார அமைச்சர்

நியூசிலாந்தில் ஊரடங்கு உத்தரவை மீறி தனது குடும்பத்துடன் கடற்கரையில் காரில் உலா வந்த சுகாதாரத்துறை அமைச்சர் டேவிட் கிளார்க் பிரதி சுகாதாரத்துறை அமைச்சராக பதவியிறக்கம் செய்யப்பட்டார்.

நியூசிலாந்தில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, கடந்த மாதம் 25ஆம் திகதி அங்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரான டேவிட் கிளார்க் ஊரடங்கு உத்தரவை மீறி தனது குடும்பத்துடன் கடற்கரையில் காரில் உலா வந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்கள் டேவிட் கிளார்க்கை கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டனர்.

இதையடுத்து தனது தவறை ஒப்புக்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் டேவிட் கிளார்க், அதற்காக வருத்தம் தெரிவித்ததோடு பிரதமர் ஜெசிந்தாவிடம் தனது ராஜினமா கடிதத்தை வழங்கினார். ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை பிரதமர் ஏற்கவில்லை. அதேசமயம் அவர் பிரதி சுகாதாரத்துறை அமைச்சராக பதவியிறக்கம் செய்யப்பட்டார்.

இது குறித்து பிரதமர் ஜெசிந்தா கூறுகையில், “டேவிட் கிளார்க் செய்த குற்றத்துக்கு அவரை நானே பதவி நீக்கம் செய்திருப்பேன். ஆனால் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க அவரது பங்களிப்பு தேவை என்பதால் அவரை பதவியிறக்கம் செய்துள்ளேன்” என கூறினார்.

No comments:

Post a Comment