இணையத்தில் வதந்திகள், துவேச பிரசாரம் செய்யும் நபர்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்க அதிகாரிகள் கடுமையாக பாடுபட்டு வருவதோடு தங்களது உயர்ந்த பங்களிப்பையும் வழங்கி வருகின்றனர்.
அவர்களது பணியை விமர்சித்து அல்லது, அவர்களது சிறிய குறைகளை காண்பித்து மிக மோசமாக அவர்களது கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அவர்களை திட்டி, அச்சுறுத்தி போலியானது அல்லது துவேஷ அடிப்படையிலான விடயங்களை உள்ளடக்கிய வீடியோ காட்சிகள் மற்றும் ஏனைய பதிவுகள் இணையத்தளங்களில் பதிவிடப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவ்வாறானோருக்கு, மிகக்கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தி, அவ்வாறானோரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி மேலதிக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும், பதில் பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment