நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலாகி மக்களை வீடுகளில் இருந்து கொரோனாவின் கோரபிடியில் இருந்து மக்களை பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதனையிட்டு மக்கள் அரசாங்கத்துக்கு பாரட்டிவரும் இச்சந்தர்ப்பத்தில் போதை வியாபாரிகளின் கெடுபிடிகளும் போதை பாவிப்பவர்களின் வன்முறையும் இக்கொரனா கோவிட் 19 வைரஸை விரைவாக பரப்புவார்கள் என்ற அச்சம் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவும் தமது அன்றாட கடமைகளை மேற்கொள்வதற்காகவும் ஊரடங்கு சட்டத்தை நீக்குகின்றது அரசாங்கம்.
இச்சந்தர்ப்பத்தை இப்போதை வியாபாரிகள் பயன்படுத்தி வெளியூர்களுக்கு சென்று தமது போதைப் பொருட்களை கொள்வனவு செய்து உள் வீதிகளுக்கு ஊடாக கொண்டு வருவதாகவும் அத்துடன் இவர்கள் ஊரடங்கு அமுல்படுத்தும் போது உள் வீதிகளை பயன்படுத்தி கிராமப் புறங்களுக்கு போதைப் பொருட்களை கடத்துவதாகவும் தமது சைக்கிள், மோட்டர் சைக்கிள்களை கலைத்து வைத்து விட்டு சில வீடுகளில் ஒன்று கூடுவதாகவும் அங்கு போதைப் பொருட்களை பயன்படுத்தி விட்டு கலைந்து செல்வதாகவும் இவர்களில் தற்சமயம் ஒருவருக்கு கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்கள் வாழும் குடும்பங்கள் மற்றும் அக்குடும்பங்களின் சூழல் போன்றன செல்லும் இடங்கள் எல்லாம் பரவும் அபாயம் மிகவும் கூடுதலாக உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலக பிரிவிலுள்ள மாஞ்சோலை, பிறைந்துறைச்சேனை, செம்மண்ணோடை, நாவலடி, சூடுபத்தினசேனை போன்ற பிரதேசங்களில் வேறு பிரதேசங்களில் உள்ள போதை வியாபாரிகள் வருவதாகவும் மற்றும் இப்போதை வியாபாரிகளின் மற்றும் போதைப் பாவனையாளர்களின் நடமாட்டம் ஊரடங்கு அமுலில் உள்ள போது கூடுதலாக இருப்பதாக அப்பிரதேசவாசிகள் மிகவும் கவலையடைகின்றனர்.
இவர்களுக்குரிய போதைப் பொருள் கிடைக்காத விடத்து வீட்டுள்ளவர்களுடன் வன்முறைகளில் ஈடுபடுவதாகவும் வீட்டிலுள்ளவர்கள் வெளியே சொல்ல முடியாமல் தயங்குவதாகவும் அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஊடரங்கு அமுலில் உள்ள போது ரோந்து பணிகளில் ஈடுபடும் பொலிஸாரை இலக்கு வைத்து தண்ணீர் ஒயில் முட்டைகளால் தாக்கிவிட்டு தப்பி சென்றுவிடுகின்றனர் என்றும் இதன் பின்னர் அவ்வீதிகளால் அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே வருகின்ற அப்பாவிகள் இப்பொலிசாரினால் கைது செய்யப்படுவதாகாவும் சமூக வலயத்தளங்களில் பொதுமக்களின் கருத்துகளை காண முடிகின்றது.
நாட்டில் மது பாவிப்பவர்களுக்கு கொரனா விரைவாக தாக்கலாம் என்பதற்காகத்தான் ஊரடங்கு நீக்கப்படும் போதும் கூட மதுக்கடைகள் திறக்க முடியாது. போதை பாவனையாளர்கள் அவர்களின் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும் எனவே இவர்களில் கொரனா போன்ற தொற்று விரைவாக தாக்கலாம் என பொதுமக்கள் பயப்படுகின்றனர்.
எனவே இப்போதை வியாபாரிகளை சட்டத்தின் முன் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர்களுக்கான நீதி மன்றில் பிணை வழங்காது மிகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் போதைப்பாவனையாளர்களை கைது செய்து அவர்களை புனர்வாழ்வு முகாம்களுக்கு உடனடியாக அனுப்ப முப்படையினரும் பொலிசாரும் மிகவும் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சதீக் முஹம்மது
No comments:
Post a Comment