கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் அதிகாரிகளுக்கு உதவும் முதியவர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 8, 2020

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் அதிகாரிகளுக்கு உதவும் முதியவர்

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் சகல அதிகாரிகளுக்கு இலவசமாக போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை இலவசமாக முதியவர் ஒருவர் வழங்கி வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிராந்தியத்தின் ஊடாக பயணம் செய்யும் பாதுகாப்பு தரப்பினர் அரசாங்க உத்தியோகத்தர்கள் சுகாதார பிரிவினருக்கு இவரது இலவச உதவிகள் கிடைப்பதை காண முடிகின்றது.

சுமார் 60 வயது மதிக்கத்தக்க இம்முதியவர் கருத்து தெரிவிக்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை அழிப்பதற்காக பாடுபடும் அதிகாரிகளை கௌரவப்படுத்தி இத்திட்டத்தை இலவசமாக நடாத்துவதாகவும் இப்பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலங்களில் எமது அதிகாரிகள் மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்கின்றனர். எனது வசதிக்கு அளவான வகையில் நான் அவர்களை மதித்து இத்திட்டத்தை ஏற்படுத்தியது மகிழ்ச்சி என குறிப்பிட்டார்.

இந்த நிலையில் புதன்கிழமை (8) பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் இவரது இவ் இலவச திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment