கொரோனாவின் தாக்கம் உக்கிரமடைந்து செல்லும் இக்காலப்பகுதியில் அரசாங்கம் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்று இல்லாமல் ஏற்படும் திடீர் மரணங்களின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அரசாங்கம் தேவைப்படுத்தியுள்ளது. அதற்கேற்ப பின்வருவனவற்றை பின்பற்றவும்.
1. மரணித்தவுடன் கிராம சேவை உத்தியோகத்தருக்கு அறிவித்தல் வேண்டும்.
2. பிரதேச பொது சுகாதார பரிசோதகருக்கு (PHI) தகவலை அறிவிக்க வேண்டும்.
3. மரணித்த நபர் கடந்த காலத்தில் ஏதாவது தொடர் நோய்களுடன் இருந்திருந்தால் அந்த மருத்துவச் சான்றிதலுடன் உயிர் பிரிந்ததன் காரணத்தை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிசாருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
4.திடீர் மரண விசாரணை அதிகாரிக்கு (கொர்னர்) அறிவித்ததன்பின்னர் அவர் மரண விசாரணைகளை மேற்கொண்டு முடித்து ஜனாஸாவை பார்வையிட்டு அவர் அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கிய பின்னர் ஜனாஸாவை அடக்கம் செய்ய முடியும்.
5. ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கும் தொழுகை நடாத்துவதற்கும் குறைந்தளவான நபர்கள் செல்வதற்கு மாத்திரமே பொலிசாரினால் அணுமதியளிக்கபடும். அதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
6. மேலதிகமாக ஜனாஸா வீடுகளில் வயோதிபர்கள் செல்வதை தடுத்துக் கொள்ளுமாறும் முகங்களை மூடுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் ஜனாஸாவை பார்க்க செல்லும் சகோதரர்கள் அதிக நேரம் அங்கு தரித்து நிற்காமல் விரைவாக குடும்பத்தாருக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறிச் செல்லுங்கள்.
மரணித்த உயிர்களுக்காய் தமது வீடுகளில் இருந்து அதிகமாக பிராத்திப்போம்.
எந்நேரத்திலும் நாட்டின் சட்டத்தை மதித்து நடப்போம்.
மேலதிகமான உதவிகளுக்கு தொடர்புகொள்ள
ரணிஸ் முஹம்மட் - 0777874834 / 0779541808
No comments:
Post a Comment