யாழ்ப்பாணத்தில் 93 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

யாழ்ப்பாணத்தில் 93 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணத்தில் 93 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன், இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு தெற்கு கரையோரப் பகுதியில் நேற்று (22) இக்கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

கடல் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதனை கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினர் வழமையான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவுடன் இணைக்கப்பட்ட கடற்படையினர், தரையை நோக்கி வந்த சந்தேகத்திற்கிடமான டிங்கிப் படகொன்றை மறித்துச் சோதனையிட்டனர். அதில் 44 பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் 93 கிலோ கிராம் கேரள கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த கேரள கஞ்சா, டிங்கிப் படகு, படகின் மோட்டார் ஆகியற்றை கைப்பற்றியுள்ளதோடு, சந்தேகநபர்கள் இருவரைக் கைது செய்துள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

தாழையடி பிரதேசத்தை 21, 35 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலைத் தொடர்ந்து சந்தேகநபர்களுக்கும் கைப்பற்றப்பட்டுள்ள பொருட்களுக்கும் தொற்றுநீக்கம் செய்துள்ளதோடு, மேலதிக நடவடிக்கைகளுக்காக சங்கானை கலால் திணைக்களத்தினரிடம் சந்தேகநபர்கள் கைப்பற்றப்பட்டுள்ள பொருட்களுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment