ஊரடங்கு தளர்வின்போது சுகாதார நடைமுறை பேணாதோருக்கு நடவடிக்கை - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், பதில் பொலிஸ் மா அதிபருக்கு அதிகாரம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

ஊரடங்கு தளர்வின்போது சுகாதார நடைமுறை பேணாதோருக்கு நடவடிக்கை - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், பதில் பொலிஸ் மா அதிபருக்கு அதிகாரம்

ஊரடங்கு அமுலில் இல்லாத நிலையில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு சட்டத்தை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், பதில் பொலிஸ் மா அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் வெளியிடப்படட அறிவிப்பில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட போதிலும், தாம் விரும்பியபடி நடந்து கொள்ள முடியாது என அவர் இதன்போது தெரிவித்தார்.

இதனை மீறும் நபர்களை கைது செய்யவும், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் போது சமூக இடைவெளியை பேணுவது அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய பொதுப் போக்குவரத்து சேவைகளின்போது விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும், எனவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக வர்த்தக நிலையங்களில், பஸ்களில் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணிப்பவர்கள் இதனை கவனத்தில் எடுக்க வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்தார்.

இவ்வாறானோர் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் நிலையில் அவர்களுக்கு 6 மாத கால சிறை மற்றும் அபராதமும் விதிக்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் 36,115 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சுமார் 10,000 வாகனங்களை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment