வாரியபொல பொலிஸ் பரிசோதகரை தாக்கிய சம்பவம் - மதுபான வர்த்தகர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

வாரியபொல பொலிஸ் பரிசோதகரை தாக்கிய சம்பவம் - மதுபான வர்த்தகர் கைது

வாரியபொல பொலிஸ் நிலையத்தில் கடமை புரியம் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தைரை தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபர் நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபரின் சகோதரரான, மதுபான விற்பனையாளர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வாரியபொலவில் உள்ள பொத்துவெல பகுதியில் வசிக்கும் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட குறித்த வர்த்தகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) இரவு, பொலிஸார் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு திட்டி, அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த மதுபான வர்த்தகர் நேற்றுமுன்தினம் (21) பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவருடன் தேரர் ஒருவர் உள்ளிட்ட மற்றொரு நபர் மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு வந்து குறித்த பொலிஸ் பரிசோதகரை அச்சுறுத்தி, அவரை தள்ளி விட்டு தாக்க முயன்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதன்போது, குறித்த பொலிஸ் பரிசோதகரின் தலை சுவரொன்றில் மோதியதாகவும் பின்னர் குறித்த சந்தேகநபர் மடக்கிப்பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, கைதான சந்தேகநபரின் சகோதரரான மதுபான வர்த்தகர் நேற்று (22) இரவு வாரியபொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் வாரியபொல நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் (21) பொலிஸார் அறிக்கைகளை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து அவருக்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது கைது செய்யப்பட்ட அவரது சகோதரரை இன்றையதினம் (23) வாரியபொல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து அவருக்கும் இம்மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment