தணமல்வில, குடாவெவ மற்றும் உஸ்ஸெல்ல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, 49 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
குறித்த பகுதிகளில் நேற்று (23) கடற்படையினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது, உஸ்ஸெல்ல பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒருவரை வழிமறித்துச் சோதனையிட்டபோது, 07 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய, குடாவெவ பகுதியில் 42 கிலோ கிராம் கஞ்சாவுடன் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடாஓயா பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் கொஸ்லாந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment