நாடு முழுவதும் இரவு 8.00 மணி முதல் திங்கட்கிழமை காலை 5.00 மணி வரை ஊரடங்கு - News View

About Us

About Us

Breaking

Friday, April 24, 2020

நாடு முழுவதும் இரவு 8.00 மணி முதல் திங்கட்கிழமை காலை 5.00 மணி வரை ஊரடங்கு

இன்று (24) இரவு 8.00 மணி முதல் திங்கட்கிழமை (27) வரை நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தினமும் முற்பகல் 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை தளர்த்தப்பட்டு வந்த ஊரடங்குச் சட்டம் இன்று (24) இரவு 8.00 மணி முதல் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நீக்கப்படவுள்ளது.

இதேவேளை, கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் திங்கட்கிழமை (27) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோர் தொடர்பில் விசேட சோதனைகளை மேற்கொள்ள விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவெளை, ஊரடங்கு உத்தரவை மீறிய 36,787 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment